கொரோனா தடுப்பூசி தொடர்பில் கூட அரசாங்கம் சிந்திக்காமல் இருக்கின்றது..!!

நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான தடுப்பூசி தொடர்பில் கூட அரசாங்கம் சிந்திக்காமல் இருக்கின்றதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “தடுப்பூசிகளைப் பெற காத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் நாங்கள் கீழே இருக்கிறோம்.

அரசாங்கம் தடுப்பூசி பற்றி கூட யோசிக்கவில்லை. ஆனால் ஏனையோர் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளைப் பற்றி பேசும்போது நகைச்சுவையாக பேசுகிறது.

தடுப்பூசியைக் குறைக்க நிதியில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், அரசாங்கம் கனேடிய அரசாங்கத்துடன் பேச வேண்டும்.  அவர்கள் ஏற்கனவே தடுப்பூசிகளை முன்பதிவு செய்துள்ளனர்.

ஆகவே அதிகப்படியான தடுப்பூசிகளை பெற வெளிவிவகார அமைச்சர், கனடாவிலுள்ள இலங்கை பிரதிநிதியை வழிநடத்த முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

Related posts