கொரோனா அச்சுறுத்தல்..!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 411 இலங்கையர்கள் கட்டுநாயக்க  சர்வதேச விமான நிலையத்தை, இன்று (வெள்ளிக்கிழமை) காலை வந்தடைந்துள்ளனர்.

கட்டார்– தோஹாவிலிருந்து 332 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 21 பேரும்  இந்தியாவிலிருந்து 58 பேரும் இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குறித்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக  விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இத்தாலியில் தங்கியிருந்த மேலும் 116 இலங்கையர்கள் நாடு திரும்பியிருந்தனர்.

இத்தாலியின் மிலான் நகரில் இருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல் 1208 ரக விசேட விமானத்தில் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts