இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,232 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,232 பேருக்கு கொரோனா  வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு, 564 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை 49 ஆயிரத்து 715 பேர்  கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய   குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 84 இலட்சத்து 78 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள 4 இலட்சத்து 39 ஆயிரத்து 747 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts