இத்தாலியில் தங்கியிருந்த மேலும் 116 இலங்கையர்கள் நாடு திரும்பினர்..!!

இத்தாலியில் தங்கியிருந்த மேலும் 116 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இத்தாலியின் மிலான் நகரில் இருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல் 1208 ரக விசேட விமானத்தில் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சுகாதார அமைச்சுக்கு சொந்தமான பீ.சீ.ஆர் பரிசோதனை கூடத்தில் இவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து இராணுவத்தினர் இவர்களை தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

Related posts