ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற மகன் கண்டுபிடிப்பு

கொவிட் தொற்று காரணமாக கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்றிரவு தாயுடன் தப்பிச் சென்ற மகன் இன்று காலை எஹலியகொடை பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 9.10 மணியளவில் குறித்த தாயும் மகனும் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இவ்வாறு தப்பிச் சென்ற தாய்க்கு வயது 25 எனவும் மகனுக்கு வயது 2 எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தாய் தனது மகனை எஹலியகொடை பிரதேசத்தில் தனது உறவினர் ஒருவரின் வீட்டில் ஒப்படைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, மகன் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆண் குழந்தையை மீண்டும் ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் ஹெரோயின் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தப்பிச் சென்றுள்ள பெண்ணை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts