கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 127 பேருக்கு கொரோனா தொற்று..!!

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில்  கொரோனா  தொற்றாளர்களாக 127பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார். நேற்று (புதன்கிழமை) மூன்று  கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து…

மேலும்

மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைப்பு..!!

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பபட காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த மனுவை நாளை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்து மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ…

மேலும்

மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்..!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட மட்டக்களப்பு மண்முனை தென்எருவில்பற்றுப் பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விசேட அமர்வு  இன்று (வியாழக்கிழமை) சபைத் தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் இடம்பெற்றது. சபையின் பிரதித் தவிசாளர், உறுப்பினர்கள், பிரதேச சபை நிருவாக உத்தியோகத்தர் கலந்துகொண்டிருந்த இன்றைய அமர்வில் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கை தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்டது. வாதப்…

மேலும்

சில நாடுகள் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரித்து வருகின்றன..!!

கொரோனா நோய் தொற்றுக் காலத்திலும் சில நாடுகள் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரித்து வருவதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.நா.சபையின் 75வது அமர்வின் ஒருபகுதியாக உலக யூத காங்கிரஸ் அமைப்பின் சார்பில் ‘யூத விரோதப்போக்கை எதிர்ப்பதில் ஐ.நா.வின் பங்கு’ என்ற தலைப்பில் இணையவழியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து…

மேலும்

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ..!!

திருவண்ணாமலை தீபத்திருவிழா அன்றும், அதற்கு முந்தைய நாளிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் சக்திவேல் தாக்கல் செய்த மனுவில் “திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீப திருவிழா மற்றும் தேர் திருவிழாவை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட…

மேலும்

தான் நியமித்த உயரதிகாரியையே பதவி நீக்கினார் ட்ரம்ப்..!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டதாக கூறும் ஜனாபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்துடன் முரண்படும் வகையில் கருத்துத் தெரிவித்த இணையப் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு முகமை (Cyber Security and Infrastructure Security – Cisa) தலைவரான கிறிஸ் க்ரெப்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ட்ரம்பால் நியமிக்கப்பட்ட கிறிஸ் க்ரெப்ஸ், வாக்காளர் நம்பிக்கை குறித்து…

மேலும்

ஒக்ஸ்போர்ட் கொவிட்-19 தடுப்பூசி..!!

ஒக்ஸ்போர்ட் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி 60 முதல் 70வயதானவர்களுக்கு ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியைக் காட்டுகிறது. இது வைரஸிலிருந்து அதிக ஆபத்தில் இருக்கும் வயதினரைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 560 ஆரோக்கியமான வயதுவந்த தன்னார்வலர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்திய பின்னர் வெளிவந்த முடிவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.…

மேலும்

மஹிந்த நாட்டு மக்களுக்கு கிடைத்த அதிஷ்டம் – ஏ.ஜே .எம். முஸம்மில்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு கிடைத்த  அதிஷ்டம் என ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே .எம். முஸம்மில் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின்   75ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும், கொரொனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்கவும் வேண்டி ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே .எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் பதுளை பிரதான…

மேலும்

யாழ். பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பரீட்சை முடிவுகளை விரைவாக வெளியிடுமாறு பணிப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் வெளிவாரிக் கற்கைகளுக்கான பரீட்சை முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பணித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த வணிகமாணி (பழைய பாடத்திட்ட) பரீட்சை முடிவுகள் தாமதமாவது குறித்து பரீட்சார்த்திகளினால் துணைவேந்தரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து இடம்பெற்ற பல்கலைக்கழக…

மேலும்

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் விடுதலை!

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோரை சில் துணி வழக்கில் இருந்து விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், இதற்கு முன்னர் கொழும்பு மேல் நீதிமன்றம் இவர்களை குற்றவாளிகளாக அறிவித்து வழங்கிய தீர்ப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு…

மேலும்