9674 பேர் தனிமைப்படுத்தலில்..!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

 ஏறாவூரில் ஒருவரும் கோறளைப்பற்று மத்தியில் ஆறு பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய கிழக்கில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம் கிழக்கு மாகாணத்தில் 9674பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 5091பேர் பி.சி.ஆர்.பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

Related posts