15-ஆவது நிதிக் குழு அறிக்கை மோடியிடம் சமர்ப்பிப்பு..!!

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப் பகிர்வு குறித்த அறிக்கை பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த 5 ஆண்டுக்கான வரி வசூல் மூலம் கிடைக்கும் தொகையை பகிா்ந்துகொள்வதில் மத்திய, மாநில அரசுகளின் பங்கை வரையறை செய்து 15-ஆவது நிதிக் குழு, அறிக்கை தயாரித்துள்ளது.

அந்த அறிக்கையின் நகலை பிரதமா் மோடியிடம் ஆணையத்தின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் சமா்ப்பித்தனா். இதன்போது ஆணையத்தின் தலைவா் என்.கே.சிங்குடன் உறுப்பினா்கள் அஜய் நாராயன் ஜா, அனூப் சிங், அசோக் லாஹிரி, ரமேஷ் சந்த் ஆகியோா் உடனிருந்தனா்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த அறிக்கை கடந்த 9 ஆம் திகதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கப்படவுள்ளது.

இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அதில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் பற்றிய தகவல்கள் வெளியாகும். மத்திய, மாநில அரசுகள் இடையிலான நிதி சாா்ந்த விவகாரங்களில் நிதிக் குழு ஆலோசனைகள் வழங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts