சிறைச்சாலைகளில் இதுவரை 504 பேருக்கு கொரோனா தொற்று..!!

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இதுவரை 504 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் இருந்து மேலும் 68 புதிய நோயாளிகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வெலிக்கடை, போகம்பர, பூசா, மாத்தறை மற்றும் குருவிட்ட சிறைகளில் கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts