இங்கிலாந்து அடுக்கு அமைப்பை வலுப்படுத்த வேண்டும்..!!

குளிர்காலத்தில் நாட்டை மீட்டெடுக்க இங்கிலாந்தின் பிராந்திய கொவிட்-19 அடுக்கு முறையை பலப்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்தின் மூத்த ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் பொது சுகாதார டாக்டர் சூசன் ஹாப்கின்ஸ், எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி முடக்கநிலை முடிவடையும் போது எதிர்காலத்தில் என்ன அடுக்குகள் இருக்கலாம் என்பதைப் தீர்மானிக்க வேண்டும் என்று கூறினார்.

தேசிய முடக்கநிலை தொடங்குவதற்கு முன்பு கொரோனா வைரஸ் பரவுவதை சமாளிக்க இங்கிலாந்தில் மூன்று அடுக்கு முறை பயன்படுத்தப்பட்டது.

இதனிடையே பிராந்திய அடுக்குகளை மீண்டும் கொண்டுவருவதாக அரசாங்கம் நம்புகிறது என்று மாற் ஹான்காக் கூறினார்.

Related posts