வாகன இறக்குமதிக்கு தடை: ஜனாதிபதியுடன் கலந்துரையாட இறக்குமதியாளர்கள் தீர்மானம்

வாகன இறக்குமதி தடையின் விளைவாக அந்நிய செலாவணி இழப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவிக்க வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அவருடனான சந்திப்பிற்காக காத்திருக்கின்றது.

இந்த மாத இறுதிக்குள் ஜனாதிபதியுடன் சந்தித்து கலந்துரையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் சிரிஷாந்த கமகே கூறியுள்ளார்.

ஜனாதிபதியை சந்தித்து வாகன இறக்குமதி தடை குறித்து கலந்துரையாடவும் கோரியுள்போதும் கொரோனா தொற்று நிலைமை காரணமாக அது தாமதமாகிவிட்டது என்றும் நவம்பர் இறுதிக்குள் அவரை சந்திக்க முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாகன இறக்குமதி மீதான தடை மூலம் அந்நிய செலாவணி இழப்புகள் இருப்பதை விட அதிகமாக இருக்கும் என்பதை ஜனாதிபதிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதியை தடை மூலம் சுமார் 1 பில்லியன் ரூபாய் அந்நிய செலாவணி சேமிக்கப்படும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

ஆனால் உண்மையில், தடையின் நேரடி விளைவாக நாடு சுமார் 2 பில்லியனை இழந்து வருகிறது என்றும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் சிரிஷாந்த கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.0Shares

Related posts