தீபாவளி பண்டிகையின்போது சீனாவிற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு..!!

இந்த வருட தீபாவளி பண்டிகையின்போது மக்கள் சீனாவின் பொருட்களை புறக்கணித்தமையினால் அந்த நாட்டிற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய்  இழப்பு ஏற்பட்டுள்ளதாக அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு  இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தா, நொய்டா, கொச்சின் உள்ளிட்ட 20 முக்கிய நகரங்களை விநியோக நகரங்களாக தெரிவுசெய்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சீன பொருட்கள் புறக்கணிப்புக்கு மத்தியில் தீபாவளி பண்டிகை காலத்தில் 20 விநியோக நகரங்களில் நுகர்வோர் சாதனங்கள், தங்க நகைகள், காலணிகள் என அனைத்து விதமான பொருட்களும் சுமார் மொத்தம்  72 ஆயிரம் கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளது.

சீன பொருட்களை மக்களும், வர்த்தகர்களும் புறக்கணித்ததால் அதன் விற்பனை அடியோடு முடங்கியது. இதனால் சீனாவுக்கு இந்த பண்டிகை காலத்தில் மட்டும்40 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை வர்த்தகர்களும்,  பொதுமக்களும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று சி.ஏ.ஐ.டி. ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Related posts