கடலோர கப்பல் போக்குவரத்து சட்டமூலத்திற்கு விரைவில் ஒப்புதல்..!!

கடலோர கப்பல் போக்குவரத்து சட்டமூலத்திற்கு மத்திய அமைச்சரவை வரும் டிசம்பர் மாதத்தில் ஒப்புதல் அளிக்கும் வாய்ப்புள்ளதாக துறைமுக கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், “கடலோர போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக அமைச்சகத்தின் சாா்பில் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு மத்திய அமைச்சரவை வரும் டிசம்பரில் அனுமதியளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த கப்பல் போக்குவரத்து சட்டமூலம் 2020 நடைமுறைக்கு வரும் நிலையில் அது, 7 ஆயிரத்து 500 கி.மீ கடலோர பரப்பளவைக் கொண்ட நாட்டின் கப்பல் போக்குவரத்தை மேலும் ஊக்குவிக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

இதன் மூலம் பொருளதார வளா்ச்சிக்கு புதிய உத்வேகம் கிடைப்பதுடன்இ அதிக வேலைவாய்ப்புகளும் உருவாகும். அமைச்சகத்தின் சீரிய முயற்சிகளால் தற்போது நாட்டில் உள்ள ஆயிரத்து 400 கி.மீ நீா்வழித்தடங்களை மேம்படுத்தும் பணிகள் முழுமை பெற்றுள்ளன.

தற்போதைய நிலையில் இந்த சட்டமூலமானது அமைச்சகங்களுக்கு இடையிலான கலந்தாய்வில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கடலோர போக்குவரத்து சட்டமூலத்தில் இந்திய கப்பல்கள் சரக்கு போக்குவரத்தை மேற்கொள்ள உரிமம் பெறுவதிலிருந்து விலக்களிக்க வகை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts