அனைத்து மத வழிபாட்டு தலங்களும் இன்று திறப்பு..!!

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகமாக இருந்தது. தினமும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர். அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்க கொரோனா வைரசின் தாக்கம் குறைய ஆரம்பித்தது.

மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அளித்தாலும் மகாராஷ்டிரா அரசு அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை. 2-வது அலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அம்மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே கவனமாக இருந்தார். பல்வேறு தரப்பில் இருந்து நெருக்கடி ஏற்பட்ட போதிலும் தனது முடிவில் உறுதியாக இருந்தார். தற்போது அங்கு கொரோனா தொற்று குறைந்துள்ளது.

இதற்கிடையே, 16-ம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களை பக்தர்களுக்காக மீண்டும் திறக்க மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஷிர்டி சாய்பாபா கோவில் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் இன்று முதல் பக்தர்களுக்காக திறக்கப்படுகிறது.

முக கவசம் கட்டாயம், அனைத்து கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related posts