இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 82 இலட்சத்தை கடந்தது.

இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 82 இலட்சத்தை  கடந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் மேலும் 41,100 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88,14,579 ஆக அதிகரித்துள்ளது. 4,79,216 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று 447பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 1,29,635ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 42,156 பேர் வீடு திரும்பினர். இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 82,05,728 ஆக அதிகரித்துள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts