இந்தப் பருவத்தில் 12 காய்ச்சல் பாதிப்பு கண்டுபிடிப்பு..!!

கனடாவில் இந்தப் பருவத்தில் இன்றுவரை 12 காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக, பொதுச் சுகாதார நிறுவனம் நாடு முழுவதும் நிலைமை குறித்து வாராந்திரம் வெளியிடும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத் தரவுகளின்படி இந்த ஆண்டுக்கான செயற்பாடு உண்மையில் சராசரிக்கும் குறைவாகவே உள்ளது என்பதனை தெளிவுப்படுத்துகின்றன.

இந்த ஆண்டு இந்த நேரத்தில் காய்ச்சல் செயற்பாடு சராசரியை விடக் குறைவாகவே இருப்பதை ஒக்டோபர் 25ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31ஆம் திகதி வரையிலான 44ஆவது வாரத்திற்கான மிக சமீபத்திய அறிக்கை காட்டுகிறது.

44ஆவது வாரத்தில், காய்ச்சலின் எட்டு ஆய்வகக் கண்டறிதல்கள் பதிவாகியுள்ளன. அவை இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியுடன் தொடர்புடையவை. அவை சமூக பரவலிலிருந்து வந்தவை அல்ல.

இந்தப் பருவத்தில் இன்றுவரை 12 காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதாக அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த ஆறு காய்ச்சல் பருவங்களை விட இது கணிசமாகக் குறைவு. அங்கு சராசரியாக 592 கண்டறிதல்கள் 35 மற்றும் 44 வாரங்களுக்கு இடையில் பதிவாகியுள்ளன.

ஒகஸ்ட் முதல் ஒக்டோபர் வரை, விதிவிலக்காக குறைந்த அளவு செயற்பாடுகள் உள்ளன. அது ஆண்டுக்கான சராசரிக்கும் குறைவாக உள்ளது. கடந்த காய்ச்சல் பருவத்திற்குச் செல்லும்போது, டிசம்பர் 15ஆம் திகதி முதல் ஜனவரி 4ஆம் திகதி வரை 9,119 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இது மொத்தம் 12,547ஆக உயர்ந்துள்ளது.

Related posts