அமெரிக்காவில் ஒரேநாளில் ஒரு இலட்சத்து 61ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஒரு இலட்சத்து 61ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கடந்த 24 மணித்தியாலத்தில் ஒரு இலட்சத்து 61ஆயிரத்து 541பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, ஆயிரத்து 190பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட முதல் நாடாக விளங்கும் அமெரிக்காவில் இதுவரை மொத்தமாக ஒரு கோடியே 87இலட்சத்து மூவாயிரத்து 936பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு இலட்சத்து 48ஆயிரத்து 585பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 38இலட்சத்து 97ஆயிரத்து 231பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 19ஆயிரத்து 261பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

அத்துடன் மொத்தமாக 67இலட்சத்து 28ஆயிரத்து 120பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Related posts