சுயதனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்காக பகிர்ந்தளிக்க ஒரு தொகை கோதுமை மா பிறீமா நிறுவனத்தினால் அன்பளிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கவென   பிரீமா நிறுவனத்தினால்  ஒரு தொகை கோதுமை மாவு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவிடம் கையளிக்கப்பட்டது. 
குறித்த பொருட்கள் இன்று(11) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரினால்  பிரதேச செயலாளர்களிடம்   உரிய குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எம்.ஏ.அனஸ்,மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் கே. சுகுனதாஸ்,மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஜன் உட்பட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Related posts