யாழில் விபச்சார விடுதியும், கருக்கலைப்பு நிலையமும் முற்றுகை..!!

யாழ். தென்மராட்சி கரம்பகம் – பாடசாலை வீதியில் இயங்கி வந்த விபச்சார விடுதியும், அதனோடு இணைந்து இயங்கிய கருக்கலைப்பு நிலையமும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

கொடிகாமம் பொலிஸார் நேற்றிரவு (10) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த விபச்சார விடுதியும், கருக்கலைப்பு நிலையமும் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்த இரு பெண்கள் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கருக்கலைப்பு சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசுவமடு மற்றும் நல்லூர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களே விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த நிலையத்திற்கு மருந்துப் பொருட்களை வழங்கி மந்திகை வைத்தியசாலை ஊழியர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கைதான மூவரும் இன்றைய தினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts