சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்..!!

கொரோனா வைரஸ் அச்சத்திற்கு உள்ளான சிலர் தற்கொலை செய்து கொள்வது கவலைக்குரிய விடயமாகும் என சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வித அறிகுறிகளும் அற்ற தொற்றாளர்களில் 80 சதவீதமானோர் குணமடைந்துள்ளதைப் போன்று அறிகுறிகளுடன் இனங்காணப்பட்ட பலரும் முழுமையாக குணமடைந்துள்ளார்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உடல் நலக்குறைவு அல்லது ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருந்துவிடக்கூடாது என்றும் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தொற்று தொடர்பான அச்சத்தில் சிலர் தற்கொலை செய்துகொள்வது கவலைக்குரிய விடயமாகும் எனத் தெரிவித்துள்ள ஜயருவான் பண்டார, இது செய்யக்கூடாததும் இடம்பெறக்கூடக் கூடாததுமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ்வாறு அச்சமடைய வேண்டிய தேவை கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொற்றுக்கு உள்ளானவர்கள் அருகில் இருந்தாலும் முகக் கவசத்தை முறையாக அணிந்திருந்தால் ஏனையோர் தொற்றுக்கு உள்ளாவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகும் என்றும் கொரோனாவுடன் வாழ்வதற்கு இந்த அடிப்படை சுகாதார விதிமுறைகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும் எனலும் சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts