கொரோனா அச்சம் – 401 இலங்கையர்கள் நாடு திரும்பினர்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 401 இலங்கையர்கள் மூன்று விமானங்களில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அதன்படி ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 50 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வேலை வாய்ப்புக்காகச் சென்ற 275 இலங்கையர்கள் இன்று அதிகாலை 5.40 மணியளவில் நாட்டை வந்தடைந்தனர்.

மேலும் ஐ.நா. அமைதி காக்கும் படைகளில் பணியாற்றுவதற்காக பல்வேறு ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்ற 76 இலங்கை இராணுவ வீரர்களும் எத்தியோப்பிய ஏயர்லைன்ஸ் மூலமாக அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

Related posts