குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது..!!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

அந்தவகையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 646 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 715 ஆக காணப்படுகின்றது.

இதில் 4 ஆயிரத்து 491 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 493 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இன்று மேலும் ஒரு உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.0Shares

Related posts