இலங்கையில் இதுவரையில் 612 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி.

இலங்கையில் இதுவரையில் 612 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 91 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அவர்களில் 82 பேர் கோட்டை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸ் தலைமையகத்திலிருந்து ஆறு பேரும் கொழும்பு – 02 பொலிஸ் நிலையம், பொலிஸ் சிறப்பு பணியகம், பொலிஸ் விளையாட்டுப் பிரிவு ஆகியவற்றிலிருந்து தலா ஒருவரும்  இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையுடுத்து, ஒக்டோபர் 4ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில் மொத்தமாக 612 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அவர்களில் 145 பேர் பொலிஸ் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts