அதிவேக வீதியில் அதிசொகுசு பேருந்து விபத்து!!

+.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இந்நாட்டுக்கு வருகை தந்தவர்களை தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் நோக்கி அழைத்துச் சென்ற அதிசொகுசு பேருந்து ஒன்று கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்றிரவு (10) 10.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் பேலியகொடை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது 25 ஆவது கிலோ மீட்டர் தூணுக்கு அருகில் பேருந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் பேருந்தின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து காரணமாக கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கிய நெடுஞ்சாலை ஒழுங்கை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு நோக்கி செல்லும் பயணிகள் ஜா-எல நுழைவின் ஊடாக பிரவேசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

+

Related posts