ஹோண்டுராஸில் சக்திவாய்ந்த ஈட்டா புயல் தாக்கியதில் 37பேர் உயிரிழப்பு..!!

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் வெப்பமண்டல புயல் ஈட்டா தாக்கியதில், குறைந்தது 57 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேரைக் காணவில்லை.

ஹோண்டுராஸ் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, நாட்டின் நீரோட்டங்கள் இப்போது தண்ணீருக்கு அடியில் உள்ளன மற்றும் ஞாயிற்றுக்கிழமை முன்னதாக 23பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், தற்போது ஹோண்டுரான் அதிகாரிகள் திங்களன்று புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று கூறினர்.

அத்துடன் சுமார் 70ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஹோண்டுராஸின் வடக்கு பகுதியில் உள்ள பல நகரங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 49வீடுகள் உள்பட 140க்கும் மேற்பட்ட கட்டடங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. 20க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் இடிந்து விழுந்தன.

வெள்ளம் சூழ்ந்த ஹோண்டுரான் நகரத்தில் இருந்து மூன்று வயது சிறுமியை அமெரிக்க இராணுவம் மீட்டெடுத்த தருணம் தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகின்றது.

Related posts