மாரவிலவில் தாய் மற்றும் இரு குழந்தைகளுக்கு கொரோனா..!!

மாரவில- மாவில பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாத்தண்டிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்  இதனை தெரிவித்துள்ளது.

சிவில் பாதுகாப்புச் சேவையில் பணியாற்றும் பெண்ணுக்கும் அவருடைய 06 மற்று 02 வயது குழந்தைகளுக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவரும் இதற்கு முன்னர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளதுடன், அவர் சிவில் பாதுகாப்பு பிரிவில் சாரதியாக பணியாற்றியவர் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை , நுவரெலியா- மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில், பிரொக்மோர் பிரிவில் மேலும் ஒரு கொரோனா வைரஸ் தொற்றாளர் இன்று (செவ்வாய்க்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts