தீபாவளிப் பண்டிகையை வீட்டிலிருந்து கொண்டாடுங்கள் – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரிக்கை

தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் அனைவரையும் வீட்டிலிருந்து அமைதியாக கொண்ட வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், “எதிர்வரும் 14ஆம் திகதி இந்துமக்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட இருக்கின்றது.

இச் சூழ்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாகப்பரவி வருகின்றது. கொரோனா தொற்று நோயினால் பல இறப்புகளும் அடுத்தடுத்து ஏற்பட்டுவருகின்றன.

இந்நிலையில் தீபாவளிப்பண்டிகைக்காக பொதுமக்கள் பெருமளவில் ஒன்றுகூடும் பொழுது இந்நோய் எமது பிரதேசத்திலும் தீவிரமாகப் பரவும் வாய்ப்புள்ளது.

எனவே இத் தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் அனைவரையும் வீட்டிலிருந்து அமைதியாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இதன் மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் அனைவரையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

எனவே நாம் அனைவரும் சமூகப் பொறுப்புடன் அமைதியாக வீட்டிலிருந்து எமது இத்தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவோம்.” என குறிப்பிட்டுள்ளார்.

Related posts