இலங்கைக்கும் வழங்கப்படுகிறது கொரோனா பரவலைக் குறைக்க உதவும் தடுப்பூசி!

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் குறைக்க உதவும் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.

குறித்த  கலந்துரையாடலில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர் ரசியா பென்ட்ஸே கலந்துகொண்டார்.

இதன்போது, தடுப்பூசியை பெறுவது குறித்து நிதியுதவி பெறுதல்,  தடுப்பூசி போட வேண்டியவர்களை தெரிவு செய்தல், சுகாதார ஏற்பாடுகள் போன்ற  விடயங்கள் பற்றி ஆராய சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

மேலும், உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து கொரோனா பரவலைக் குறைக்க உதவும் தடுப்பூசியை  நாட்டின் மக்கள் தொகையில் 20 வீதமானோருக்கு பெறுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு  குறிப்பிட்டுள்ளது.

Related posts