விஜய் ஒரு விஷ வளையத்திற்குள் சிக்கியுள்ளார்..!!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியலில் பல மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரையுலகத்திலிருந்தும் பலர் பல்வேறு கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். நடிகர் விஜயின் பெயரை பயன்படுத்தி அவரது அப்பா சந்திரசேகர் ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்துள்ளார்.

இந்த கட்சிக்கும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் தன்னுடைய இரசிகர்கள் அதில் இணையக்கூடாது எனவும் விஜய் அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த எஸ்.ஏ.சந்திரசேகர் ‘விஜய் ஒரு விஷ வளையத்தில் சிக்கி உள்ளார். அதிலிருந்து அவரை வெளியே கொண்டுவந்து காப்பாற்ற வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

அப்படி எந்த ஒரு விஷ வளையத்திற்குள் விஜய் சிக்கியிருக்கிறார் என்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts