பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் கறுப்பு பணத்தை குறைக்க முடிந்தது..!!

பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் கறுப்பு பணத்தை குறைக்க  முடிந்ததென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் திகதி, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தாள்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டு, புதிதாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் பணத்தாள்கள் வெளியிடப்பட்டன. பணமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதனை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, தனது ருவிட்டர் பதிவில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புபணத்தை குறைக்கவும்,வரிகளை முறைப்படுத்தவும் உதவியது.

மேலும், இந்த நடவடிக்கை நாட்டின் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும்  முக்கிய பங்கு வகித்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts