தமிழக சட்டசபை தேர்தல்..!!

தமிழக தேர்தல் பிரசாரத்தில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக பா.ஜ.க மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஆலோசனை எதிர்வரும் தீபாவளி பண்டிகை முடிவடைந்தவுடன் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதில் தமிழக பா.ஜ.க தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். கட்சி தலைவர் நட்டா தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது

தற்போதுள்ள அரசியல் சூழல், பிரசார வியூகம், இளம் வாக்காளர்களை கவர்வது ஆகியவை குறித்து பிரதமர் மோடியும்,  அமித் ஷாவும்  ஆலோசனை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts