பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் கறுப்பு பணத்தை குறைக்க முடிந்தது..!!

பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் கறுப்பு பணத்தை குறைக்க  முடிந்ததென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் திகதி, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தாள்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டு, புதிதாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் பணத்தாள்கள் வெளியிடப்பட்டன. பணமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை…

மேலும்

வாழைச்சேனையில் ஊரடங்கு நீடிப்பு..!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தியில் மீண்டும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கொரோனா மைய காரியாலயத்தை மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை)  திறந்துவைத்த பின்னர்…

மேலும்

இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது டெல்லி அணி!

ஐ.பி.எல் ரி-20 தொடரின் இறுதிப் போட்டிக்கான 2ஆவது நேரடி தகுதிப் போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி 178 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று இராண்டாவது அணியாக இறுதி போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் முதன்முறையாக டெல்லி அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ்…

மேலும்

விஜய் ஒரு விஷ வளையத்திற்குள் சிக்கியுள்ளார்..!!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியலில் பல மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையுலகத்திலிருந்தும் பலர் பல்வேறு கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். நடிகர் விஜயின் பெயரை பயன்படுத்தி அவரது அப்பா சந்திரசேகர் ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்துள்ளார். இந்த கட்சிக்கும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் தன்னுடைய…

மேலும்

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா..!!

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், வீட்டிலேயே தன்னை சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடந்த 5 நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை எடுத்துக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். நடிகர் சிரஞ்சீவி ஆச்சார்யா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். குறித்த படப்பிடிப்பு கொரோனா பரவல்…

மேலும்

நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்..!!

கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கான சாத்தியம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொள்ளுபிட்டியில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொவிட் 19 தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பாக நேற்று முன்தினம் கலந்துரையாடப்பட்டதாக…

மேலும்

ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உலகளவில் ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் ஐந்து கோடியே ஏழு இலட்சத்து 31ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உலகளவில் வைரஸ் தொற்றினால் 12இலட்சத்து 61ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர மூன்று கோடியே 57இலட்சத்து 93ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு…

மேலும்

தமிழக சட்டசபை தேர்தல்..!!

தமிழக தேர்தல் பிரசாரத்தில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக பா.ஜ.க மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த ஆலோசனை எதிர்வரும் தீபாவளி பண்டிகை முடிவடைந்தவுடன் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதில் தமிழக பா.ஜ.க தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். கட்சி தலைவர் நட்டா தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த கூட்டத்தில் பங்கேற்க…

மேலும்

நேற்று மட்டும் 510 கொரோனா தொற்று ..!!

இலங்கையில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 510 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 213 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 183 பேர் கம்பஹாவை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 72 பேர் வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் என்றும் 12 பேர்…

மேலும்

கொழும்பு மத்திய தபால் பரிமாறல் கடமைகள் மீண்டும் ஆரம்பம்.

கொழும்பு மத்திய தபால் பரிமாறல் கடமைகள் சில மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: குறைந்த பட்ச பணியாளர்களை பயன்படுத்தி மத்திய தபால் பரிமாறல் கடமைகளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமைக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட போதிலும் , இந்த ஆளணியினரை எழுந்தமானமாக பிசிஆர்…

மேலும்