அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவும் கொவிட்-19 தொற்று: பாதிப்பு ஒரு கோடியை நெருங்குகிறது!

அமெரிக்காவில் அசுரவேகத்தில் பரவும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்குகின்றது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அமெரிக்காவில் மொத்தமாக 99இலட்சத்து 19ஆயிரத்து 522பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அமெரிக்காவில், ஒரு இலட்சத்து 18ஆயிரத்து 204பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆயிரத்து 125பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல்நாடாக விளங்கும் அமெரிக்காவில் இதுவரை மொத்தமாக இரண்டு இலட்சத்து 40ஆயிரத்து 9539பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 33இலட்சத்து 38ஆயிரத்து 097பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 18ஆயிரத்து 160பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை 63இலட்சத்து 40ஆயிரத்து 472பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Related posts