மேலும் 3 ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன!

பிரான்ஸில் இருந்து மேலும் மூன்று ரஃபேல் விமானங்கள் இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளது.

இஸ்ட்ரெஸ் நகரிலிருந்து புறப்பட்ட விமானங்கள் குஜராத் மாநிலம் ஜாம் நகர் விமானப்படை தளத்தை வந்தடைந்துள்ளது.

பிரான்ஸ்  போர் விமானத்தின் மூலம் ரஃபேல் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவிற்கு வருகை தந்துள்ள மொத்த ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 28 விமானங்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய விமானப்படையை பலப்படுத்தும் வகையில் பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஜுலை மாதம் 5 ஆம் திகதி ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டன. குறித்த விமானங்கள் செப்டம்பர் மாதம் முறைப்படி இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts