நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை!

நாட்டின் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தினால் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, எஹெலியகொடை, எலபாத்த, குருவிட்ட ஆகிய பிரதேசங்களுக்கும், கேகாலை மாவட்டத்தில் ரூவான்வெல்ல பிரதேச பிரிவுக்கும் இவ்வாறு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழையை கவனத்தில் கொண்டு இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவத்தின் பொது முகாமையாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கையில், குறிப்பிட்ட பிரதேசங்களில் தற்போது நிலவும் காலநிலையை கவனத்தில் கொண்டு முதல் கட்ட மஞ்சள் அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் இருந்து பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வதற்கு முப்படையினரும், பொலிசாரும் தயார் நிலையில் உள்ளனர்.

அனர்த்தங்கள் தொடர்பாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு 177 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் அனர்த்த நிலை தொடர்பான தகவல்களுக்காக எந்த நேரத்திலும் பொது மக்களால் தொடர்பு கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

Related posts