அரிசிக்கான அதிகபட்ச விலை குறித்த வர்த்தமானி வெளியானது!

அரசி உற்பத்தியாளர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வரையில் அரசிக்கான அதிகபட்ச விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகார சபையால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோ சிகப்பு மற்றும் வௌ்ளை பச்சை அரிசி, சம்பா அரிசிக்கான அதிகபட்ச விற்பனை விலை 94 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வௌ்ளை அல்லது சிகப்பு சம்பாவுக்கான அதிகபட்ச விற்பனை விலை 94 ரூபாயாகவும் நாட்டரிசி ஒரு கிலோ 92 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், வௌ்ளை அல்லது சிகப்பு பச்சை அரிசி ஒரு கிலோவின் அதிகபட்ச விற்பனை விலை 89 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts