மூன்று STF முகாம்கள் தனிமைப்படுத்தலுக்கு..!

கொரோனா தொற்று காரணமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 3 முகாம்களை தனிமைபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் களனி, களுபோவில மற்றும் ராஜகிரிய ஆகிய பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம்களே இவ்வாறு தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 56 பேர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts