கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை எடுப்பதற்கு மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியான பொருளாதாரம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் செயற்படுவதற்காக அதிகாரம் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பெசில் ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.