இந்திய – சீனப் பிரச்சினை : எட்டாம் சுற்று பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு!

இந்திய – சீனப் படைகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில் கடந்த மே மாதம் முதல் இந்திய – சீனப் படைகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ஏழு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இருப்பினும் இன்னும் இணக்கப்பாடு எட்டப்படிவில்லை.

குறிப்பாக எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீன படைகளை விலக்கிக்கொள்வதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.  இந்நிலையிலேயே எட்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக  கடந்த ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டுப் படைகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் இந்திய வீரா்கள் 20 போ் உயிரிழந்துள்ளதுடன், சீனத் தரப்பில் 35 போ் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை அந்நாட்டு இராணுவம் உறுதிபடுத்தவில்லை என்பது குறிப்பிடப்பட்டது.

Related posts