அமெரிக்க ஜனாதிபதியாகும் ஜோ பைடுன்..!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முதல் கட்ட முடிவுகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடுன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடுனும் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.

இந்த தேர்தலில் அமெரிக்காவில் உள்ள மொத்தம் 50 மாகாணங்களில் 538 தேர்வாளர்கள் உள்ளனர். இவர்களில் 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அமெரிக்க ஜனாதிபதி அமர முடியும்.

இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று நெருக்கடிக்கு இடையே, தோ்தல் தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்னரே தபால் மூலமும் நேரடியாகவும் சுமாா் 10 கோடி போ் வாக்களித்த நிலையில், வாக்குப் பதிவு தொடங்கிய பிறகு வாக்குச் சாவடிகளில் வாக்களாா்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனா்.

விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த வாக்குப் பதிவின் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள முடிவுகள், முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

புதன்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, ஜோ பைடுன் 129 வாக்குகளும், டிரம்ப் 94 வாக்குகளும் பெற்று முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், நியூயார்க், வெர்மாண்ட் மாசசூசட்ஸ், நியூஜெர்சி, மேரிலேண்ட், கனக்டிகட், டெலவர் மாகாணங்களில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடுன் வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோன்று ஓக்லஹாமா, கெண்டகி, இண்டியானா, அர்கஜ்சாஸ், டென்னிசீ, வெஸ்ட் விரிஜினியா மாகாணங்களில் டிரம்ப் பெற்றி பெற்றுள்ளார்.

Related posts