44 பேருக்கு தொற்று உறுதியானது..!!

கொரோனா 3வது அலையில் சிக்கி இலங்கை திணறி வரும் நிலையில் வடக்கு மாகாணமும் முழுமையாக சிக்குண்டுள்ளதை அடுத்து இதுவரை 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று முதலாவது அலை தாக்கம் செலுத்திய காலகட்டமான கடந்த மார்ச் மாதத்தில் யாழ். அரியாலை விசேட ஆராதனை கூட்டம் நடத்திய சுவிஸ் போதகர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து யாழ் மாவட்டம் கொரோனா அபாய வலயமாக மாறி ஒருவாறு அதிலிருந்து மீண்டு இயல்புநிலைக்கு திரும்பியிருந்தது.

Related:

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து செப்டெம்பர் மாதம் வரையான காலகட்டத்தில் வடக்கு மாகாணத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிந்தது.

இந்நிலையில் கொரோனா 3வது அலை இலங்கையின் தென் மாவட்டங்களை பெரிதும் பாதித்து வருகையில் தற்போது வடக்க மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா 3வது அலை தொடக்கமான ஒக்டோபர் முதல் நேற்றைய (நவ-02) தினம் வரை வடக்கு மாகாணத்தில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, யாழ் மாவாட்டத்தில் 15 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 14 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 10 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் முதல் 59 தொற்றாளர்கள் வடக்கு மாகாணத்தில் உறுதி செய்யப்பட்டிருந்ததாக நேற்றைய தினம் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்திருந்த நிலையில் நேற்யை பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் கிளிநொச்சியில் ஒருவருக்கும், புதுக்குடியிருப்பில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts