கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கூடும் நாடாளுமன்றம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

எனினும் நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக 2 மணித்தியாலங்களுக்கு மாத்திரம் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் முன்வைக்கப்படவுள்ள இரண்டு வைத்திய கட்டளை சட்டங்கள் தொடர்பாக விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சேவைக்கு அழைக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தவிர்ந்த ஏனையோருக்கு இன்று நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் ஊடகவியலாளர்களுக்கும் இன்று நாடாளுமன்ற அனுமதி வழங்கப்படமாட்டாது என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts