பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று !

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் காலப்பகுதி மற்றும் பரீட்சை நடவடிக்கைகள் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் தலைமையில் இந்த கலந்துரையாடல் Zoom technology வாயிலாக கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் கல்வி துறையைச் சார்ந்த உயர் மட்ட அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.

இதன்போது கல்வி துறையின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக சில முக்கியமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார்.

Related posts