சுகாதாரப் பிரிவு பொதுமக்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை..!!

சுவாச கோளாறினால் அவதியுறும் நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு சுகாதாரப் பிரிவு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

சுவாச கோளாறு உள்ள நோயாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமாயின், நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்பதால் அவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியில் நோய் அறிகுறிகள் இருக்குமாயின், 0117 966 366 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts