இந்தியாவில் கொரோனா பரிசோதனை 11 கோடியை தாண்டியது..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 8.55 இலட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

இதன்படி நேற்று வரை மட்டும் 11 கோடியே 7 இலட்சத்து 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 82.29 இலட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 75.44 இலட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். புதிய நோய்த்தொற்றும் படிப்படியாக குறைந்து வருகிறது.

அதேசமயம் கொரோனா தொற்றை விரைவாக கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts