மீனவர்கள் கடன்களைச் செலுத்துவதற்கு சலுகைக் காலம்..!!

மீனவர்கள் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான நிவாரண காலத்தை பிரகடனப்படுத்தி மூலதன கடன் வழங்கும் திட்டமொன்றை அமுலாக்கப்போவதாக ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் துறைமுகங்களில் குவிந்துள்ள மீன்களைக் கொள்வனவு செய்வதற்கு முப்பது கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சின் இடையீட்டுடன் மீன்கள் கொள்வனவு செய்யப்படும். ரின் மீன் உற்பத்தியாளர்கள், கருவாடு மற்றும் மாசி உற்பத்திகளில் ஈடுபடுவோர், குளிர்பதன வசதிகளைக் கொண்ட வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடலுணவை விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts