கொரோனா தொற்றாளர்களுக்காக 143 ICU கட்டில்கள்..!!

கொவிட் 19 தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க நாடு தழுவிய வைத்தியசாலைகளில் 143 ICU கட்டில்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள ICU கட்டில்களில் மூன்று மாத்திரமே பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கொவிட் தொற்று அவதான நிலைமையை அடைந்தால் ICU கட்டில்கள் பாவனை அதிகரிக்கும். நோளாளர்கள் சடுதியாக அதிகரித்தால் இந்த கட்டில்களின் தேவையும் அதிகரிக்கும். IDH உள்ளிட்ட எந்தவொரு வைத்தியசாலைகளிலும் இந்த ICU கட்டில்கள் நிரம்பவில்லை. தற்போதைய நிலவரப்படி 3 ICU கட்டில்கள் மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றன. அந்த வைத்தியசாலையில் 10 ICU கட்டில்கள் உள்ளன என தெரிவித்துள்ளார்.

Related posts