கொரோனா பாரிய அலையாக மாறலாம்- திஸ்ஸ எச்சரிக்கை

நாட்டில் தற்போது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள கொரோனா, பாரிய அலையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதென வைரஸ் நோய் தொடர்பான நிபுணரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். திஸ்ஸ விதாரண மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா தொற்று காரணமாக இதுவரை இலங்கையில் நூற்றுக்கும் அதிகமானவர்கள்…

மேலும்

இறுதி நேரத்தில் சம்பந்தனை சந்தித்த அஜித் டோவால்…!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், நேற்று மாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார். கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இந்த சந்திப்பு இடம்பெற்றமையை எமது செய்தி சேவைக்கு உறுதிசெய்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், வடக்கு கிழக்கின்…

மேலும்

வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் – மோடி

நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மன் கி பாத் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், கடினமாக உழைக்கும் இந்திய விவசாயிகளின் நலனை காப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என குறிப்பிட்டார். மத்திய அரசு நிறைவேற்றிய…

மேலும்

வேளாண் சட்டங்களை புரிந்துகொள்ளாமல் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக குற்றச்சாட்டு

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து சரியாகவோ, முழுமையாகவோ புரிந்துகொள்ளாமல் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக நிதி ஆயோக்கின் விவசாய உறுப்பினர் ரமேஷ் சந்த் தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தினால், விவசாயிகளின் வருமானம் பல மடங்கு உயரும் எனவும் அவர் கூறியுள்ளார். சில மாநிலங்களில் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயரவும் வாய்ப்புள்ளது என்றும் அவர் விளக்கியுள்ளார்.…

மேலும்

புதிய பொலிஸ்மா அதிபர் பிரதமருடன் சந்திப்பு

நாட்டின் 35ஆவது பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து சி.டீ.விக்ரமரத்ன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து, தனது சேவை குறித்து கலந்துரையாடியுள்ளார்.  இன்று  (திங்கட்கிழமை) முற்பகல், விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, புதிய பொலிஸ்மா அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,  நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் பொலிஸ் துறையின்…

மேலும்

கொழும்பில் கொரோனா பரவல் குறைவடையும் வாய்ப்பு – சுதத் சமரவீர

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா பரவல் எதிர்வரும் காலங்களில் குறைவடையலாம் என தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த அந்தப் பிரிவின் பிரதான வைத்தியர் சுதத் சமரவீர, தற்போது மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனைகளின் அடிப்படையில், கொரோனா வைரஸை பரப்புகின்ற நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருக்கின்றமையை அவதானிக்க…

மேலும்

வலி.வடக்கு பிரதேச சபை வரவுசெலவு திட்டம் 27 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உள்பட்ட வலி. வடக்கு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 27 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றபட்டுள்ளது. தவிசாளார் சோ.சுகிர்தனால் இன்று (திங்கட்கிழமை) 39 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் முன்வைக்கப்பட்டது. இதற்கு ஆதரவாக 30 உறுப்பினர்களும் 3 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். அத்தோடு 4 பேர் சபைக்கு சமூகமளிக்கவில்லை.…

மேலும்

மன்னாரில் மேலும் 4பேருக்கு கொரோனா!- பலர் சுயதனிமைப்படுத்தலில்

மன்னார் மாவட்டத்தில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் டி.வினோதன்…

மேலும்

பசில் ராஜபக்ஷவிற்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடையை நேக்கு மேல் நீதிமன்றம் உத்தரவு

பொது நிதியில் ஜி.ஐ குழாய் கொள்வனவு மற்றும் ஐம்பது இலட்சம் பஞ்சாங்க நாட்காட்டிகள் அச்சிடப்பட்ட வழக்கில் பசில் ராஜபக்ஷவிற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு செல்வதற்கான தடையை நீக்கி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ரஜபக்ஷ மற்றும் திவி நெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்கவிற்கும் எதிரான குறித்த…

மேலும்

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!…..

யாழ்ப்பாணம்- கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப்பகுதியில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று பிற்பகல் மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த இளைஞன் தாயாரிடம் பணம் கேட்டதாகவும் தாய் பணம் கொடுக்க மறுத்துள்ளதால் கோபமடைந்து தனது அம்மம்மாவின் வீட்டிற்கு சென்று அங்கு அவர் தூக்கில்…

மேலும்