பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணிக்கு சென்ற 23பொலிஸாருக்கு கொரோனா..!!

குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு பணிக்கு சென்ற 23 பொலிஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று (வெள்ளிக்கிழமை)  தனது சொந்த மாநிலமான குஜராத் சென்றிருந்தார்.

பிரதமரின் வருகை காரணமாக பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பொலிஸாருக்கு நேற்றுமுன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

குறித்த பரிசோதனை முடிவுகளில் 23பொலிஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts