கருக்கலைப்பு சட்டம் தொடர்பான நிலைப்பாட்டை மாற்றிய போலந்து ஜனாதிபதி..!!

தீவிர போராட்டம் காரணமாக கருக்கலைப்பு சட்டம் தொடர்பான தனது நிலைப்பாட்டை, போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் துடா மாற்றியுள்ளார்.

கருவுற்றிருக்கும் கருவை கருக்கலைப்பு செய்ய பெண்களுக்கு உரிமை இருக்க வேண்டும். ஒரு பெண்ணின் இத்தகைய செயல்களுக்கு சட்டம் தேவையாக இருக்க முடியாது என்று அவர் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடான போலந்தில், கருவில் ஏற்படும் குறைபாடுகளைக் காரணம் காட்டி கருக்கலைப்புச் செய்வது சட்டத்திற்கு விரோதமானது என அரசியலமைப்பு தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அண்மைய தினங்களாகவே ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

இது பெண்களின் உரிமைகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, தலைநகர் வார்சாவில் உள்ள ஆளுங்கட்சி தலைவர் கசின்ஸ்கியின் வீட்டின் அருகே திரண்ட ஆயிரக்கணக்கானோர் கைகளில் பதாகைகளை ஏந்தி, அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கருக்கலைப்பு சட்டம் தொடர்பான தனது நிலைப்பாட்டை, போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் துடா மாற்றியுள்ளார்.

கருவின் குறைபாடுகள் காரணமாக கருக்கலைப்பு செய்வது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும், கருக்கலைப்பு செய்வதற்கான சில சட்டபூர்வமான காரணங்களில் இது மிகவும் பொதுவானது எனவும் போலந்தை ஐரோப்பிய பிரதான எண்ணப்பாட்டிலிருந்து மேலும் ஒதுக்கி வைப்பதாகவும் நீதிமன்றம் அண்மையில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts